.jpg)
செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி அங்கு ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ள நாசா, அதற்காக விண்வெளி வீரர்களுக்கென அதி நவீன ஆடைகளையும் தயாரித்துள்ளது.
ஒட்சிசன் வாயுவை விறியோகிக்கவும் காபனீரொட்சைட்டை வெளியேற்றவும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆடைகள், அதிக வெப்பம் மற்றும் குளிரில் இருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என தெரிக்கப்படுகின்றது.
1992ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்தவாரே தற்போதைய விண்வெளி வீரர்கள் தங்களது ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே, அதி நவீன ஆடைகளை விண்வெளி வீரர்களுக்காக தயாரிக்க நாசா தீர்மானித்திருந்தது.
பல கடினமான நூலிழைகளால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நவீன ஆடைகள், நெகிழும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !