.jpg)
உலகின் மிகவும் விருப்பத்துக்குரிய பெண்ணாக ஹொலிவூட் நடிகையான ஜெனிபர் லோரன்ஸ் தெரிவாகியுள்ளார். 22 வயதான இவர் ஆண்கள் இணையத்தள இதழான ஆஸ்க் மென்.காம் நடத்திய கணக்கெடுப்பில் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.
மிகவும் அழகான ஜெனிபர், ஆண்கள் மத்தியில் தனக்கென தனி இடம் வைத்திருப்பவர். மிகவும் எளிமையான இவருக்குத்தான் இப்போது அதிகமானோர் வாக்களித்து உலகிலேயே அதிக விருப்பத்துக்குரிய பெண்ணாக தெரிவு செய்துள்ளனர். இதில் ஜெனிபருக்கு ஆதரவாக 20.4 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
ஜெனிபர் தொடர்பில், வாக்கெடுப்பு நடத்திய மேற்படி இணையதளத்தின் ஆசிரியர் ஜேம்ஸ் பாஸில் கூறுகையில், 'மற்றவர்களை விட ஜெனிபருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. அவர் ரொம்ப புத்துணர்வு மிக்கவர். எந்த வதந்தியிலும் சிக்காதவர். அதுவே அவருக்கு நிறைய ஆதரவாளர்களைத் திரட்டிக் கொடுத்து விட்டது' என்றார்.
இந்த வாக்கெடுப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் ஹொலிவூட் நடிகை மிலா குனிஸ். மூன்றாவது இடத்தில் பிரபல மொடல் அழகி கேட் உப்டன் உள்ளார். நான்காவது இடம் கருப்பழகியாக வர்ணிக்கப்படும் ரிஹானாவுக்கு கிடைத்துள்ளது. நடிகை எம்மா ஸ்டோன் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
பிரபல தொலைக்காட்சி நடிகையான சோபியா வெர்கரா, கடந்த ஆண்டு வெற்றியாளராக மகுடம் சூட்டியிருந்தார். ஆனால் இந்த முறை அவர் 12ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமாவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு 48ஆவது இடம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !