
மலைப்பகுதிகள் பல்வேறு இயற்கை சீற்றங்கள், செயற்கை காரணங்களால் பாதிப்புக்குள்ளாகின்றன.
மலைகளின் மீது, அமைந்துள்ள விதிமுறைகளை மீறிய பல அடுக்கு மாடி கட்டடங்களும், போதிய மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாத வளர்ச்சி திட்டங்களும் மழைகாலங்களில் பல உயிர்பலிகளை ஏற்படுத்தி வருகின்றன.
பண்டையகால மக்கள் மலைகளை புனித ஸ்தலமாகவும், உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் கருதி வந்துள்ளனர்.
இதனடிப்படையில் தான் மலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியமும், இங்குள்ள அரிய பொக்கிஷங்களை அழிக்காமல் தடுக்க வேண்டிய கடமையும் நம் எல்லோருக்கும் உள்ளது.
உலகளவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய ஆய்வுகளின் படி, உலகில் உள்ள மிகவும் பழமையான மலைகளின் உயரம் நாளுக்கு, நாள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையிலுள்ள பல மலைகளுக்கும் பொருந்தும்.
இதில், சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொள்ளாத, திட்டமிடப்படாத வளர்ச்சிப்பணிகள் அதிகரித்து வருவது எதிர்காலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தும்.
இலங்கையில் உயரத்தின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களை பேதுருதலாகல, கிரிகல்பொத்த, தொட்டுபொலகந்த, சிவனொலிபாதமலை, கெக்கிலியாமண ஆகிய மலைகள் பிடித்துள்ளன.
இவற்றில் சிவனொலிபாத மலை அநுராதபுரத்திலும் ஏனைய நான்கு மலைகளும் ஹட்டனிலும் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், அரியவகை மூலிகைகளை பாதுகாப்பதற்காகவும், சுத்தமான காற்றை பெறுவதற்காகவும் மாலைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
எனினும் இலங்கையில் தற்காலத்தில் அதிகரித்து வரும் சனத்தொகை பரம்பலின் காரணமாக மலைப்குதிகளில் குடித்தொகை பரம்பல் அதிகரித்து வருகிறது.
இதனால் மலைப்பகுதிகள் பாதிக்கப்பட்டு வெப்பமயமாதல் காரணமாக காட்டுப்பகுதிகள் அழிவடைந்து வருகின்றன.
இத்தகையதொரு சூழ்நிலை தொடரும் பட்சத்தில் இலங்கை மலைப்பகுதிகளில் பாரிய அழிவு ஏற்படக் கூடும் என வனவியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !