“கும்கி பட நாயகன், விக்ரம் பிரபு” நடிக்கும் “இவன் வேற மாதிரி”

“எங்கேயும் எப்போதும் படத்தின், மெகா வெற்றிக்கு பின், அடுத்த அடியை நிதானமாக எடுத்து வைத்துள்ளார், இயக்குனர் சரவணன். பிரபல இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கும், அடுத்த படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பவர், “கும்கி பட நாயகன், விக்ரம் பிரபு. இந்த படத்துக்கு என்ன பெயர் வைப்பது என்பது குறித்து, இயக்குனர் மற்றும் படப் பிடிப்பு குழுவினருக்கு இடையே, நீண்ட நாளாக ஆலோசனை நடந்ததாம். இறுதியில், “இவன் வேற மாதிரி என்ற, வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கினாலும், இன்னும் ஹீரோயின் தேர்வு செய்யப்படவில்லையாம். “படத்தின் பெயர் மட்டுமல்ல, படத்தின் கதையுமே, மற்ற படங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்கின்றனர், படக் குழுவினர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !