பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 15.11.2012 காலையில் "தேசத்திற்கு நிழல்" தேசிய மரநடுகை நிகழ்வு பாடசாலையின் அதிபர் பொன்.வன்னியசிங்கம் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. நடைபெற்ற இந்நிகழ்வில் ம.தெ.எ.பற்று பிரதேசசெயலகத்தில் இருந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சர்மிளா சபீந்தன் அவர்களும் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட நிழல்தரும் மரங்களும் இந்நிகழ்வின் போது நடப்பட்டது. பாடசாலையின் சூழல் படையணிக்குப் பொறுப்பான ஆசிரியர்களும் மாணவர்களும் இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பினை அடிப்படையாகக் கொண்டு 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட "தேசத்திற்கு நிழல்" தேசிய மரநடுகை வேலைத்திட்டம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 ஆந் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Home »
பிராந்திய செய்திகள்
» தேசத்திற்கு நிழல் தேசிய மரநடுகை நிகழ்வு
தேசத்திற்கு நிழல் தேசிய மரநடுகை நிகழ்வு
Written By Anonymous on Friday, November 16, 2012 | 1:25:00 PM
Labels:
பிராந்திய செய்திகள்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !