துப்பாக்கி விமர்சனம்
@வஞ்சி ஊரன்
முருகதாஸ் கூட விஜய் இணைந்து பணியாற்றிய முதல் படம் என்பதுவே துப்பாக்கி படத்துக்கான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலிருந்து எகிறவிட்டிருந்தது.கூடவே ஹாரிஸ் ஜெயராஜ் இசை என்று தெரிந்தபோது எதிர்பார்ப்பு இன்னமும் கூடியது..காஜல் நாயகி என்றவுடன் கிளுகிளுப்பும் கூடவே சேர்ந்துகொண்டது.மாற்றானுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்,ஆரம்பத்தில் எஸ் எ சி-முருகதாஸ் பிரச்சனையால் தடுமாறி,பின்னர் ”கள்ளத்துப்பாக்கி” பிரச்சனையால் இழுபட்டு இழுபட்டு,இறுதியாக “U ” செர்டிபிகேட் தகுதி பெற்று தீபாவளி விருந்தாக திரைக்கு வந்திருக்கின்ற துப்பாக்கி வெடித்திருக்கிறதா இல்லை புகை மட்டும் தள்ளியிருக்கிறதா என்று பார்க்கலாம்..ஒரு சாதாரண கதையை வித்தியாசமாக கையாண்டு “ஆக்சன் திரில்லர்” என்னும் வகையறாவுக்குள் துப்பாக்கியை கொடுக்க முயன்றிருக்கிறார் முருகதாஸ்.இந்தியன் ஆர்மியில் இருக்கும் விஜய் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கையில் அங்கு இடம்பெறும் குண்டுவெடிப்புகளால் ஈர்க்கப்பட்டு வாலேன்டியராக அதற்குள் தலையை போட்டு தீவிரவாத கும்பலின் தலையை எவ்வாறு தீர்த்துக்கட்டுகிறார் என்பதே படத்தின் கதை.ஆர்மிக்குரிய உடல்வாகு விஜய்க்கு இயல்பாகவே இருப்பதால் அது படத்துக்கு ஒரு ப்ளஸ்.

வழமையான விஜய்யின் மசாலா பட வகையறாவுக்குள் இது இல்லை என்பதால் சில
அடிமட்ட விஜய் ரசிகர்களுக்கு படம் பிடிக்காமல் போயிருக்க கூடும்.நகைச்சுவை
என்று அதற்காக தனி ட்ராக் இல்லாவிட்டாலும் கூட போலீசாக வரும் சத்தியன் சில
இடங்களில் சிரிப்பை வரவைக்கிறார்,மறுபக்கம் விஜய் யின் சீனியர் ஆபீசராக
வரும் ஜெயராம்,தான் தோன்றும் அனைத்து காட்சிகளிலும் வயிற்றை
புண்ணாக்குகிறார்.அது போக விஜய்யின் வழமையான குறும்புகளும் படத்தில் உண்டு.
கட்டடம் விட்டு கட்டடம் தாவும் சண்டைக்காட்சிகளாக அல்லாமல்
துப்பாக்கியில் சண்டை காட்சிகள் அனைத்தும் சூப்பர் ரகம்.படத்தில் ஏகப்பட்ட
திருப்பங்கள் ட்விஸ்ட்கள் நாங்கள் எதிர்பாராத நேரங்களில் வருகிறது.பின்னணி
இசை கலக்கல்.எழுத்தோட்டத்திலும்,வில்லனுக்கான காட்சிகளிலுயும்,திடீர்
திருப்பங்களிலும் பின்னணி இசை பிரமாதப்படுத்துகிறது.
ஏலவே படத்தின் ஆடியோ வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தன.நீதானே
என் பொன்வசந்தம் ஆல்பம் மற்றும் போடா போடி ஆல்பம் போன்றவற்றை பின்தள்ளி
ரேட்டிங்கில் முதலிடத்தில் துப்பாக்கி ஆடியோ அல்பம்
இருந்துகொண்டிருக்க,”கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன்” பாடல் அனைவரது
வாயிலும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.மாற்றானில் தனது திறமையில் சற்றே
சறுக்கி இருந்த ஹாரிஸ் துப்பாக்கியில் அந்த தப்பை செய்திருக்கவில்லை என்று
நினைத்தேன்.பாடல்கள் நன்றாக இருந்தாலும் பாடல்களின் காட்சியமைப்பில்
முருகதாஸ் சொதப்பியிருக்கிறார் என்று கூறலாம். பாடல்களின் வெற்றிக்கு
இணையாக விசுவல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை..
வில்லன் படத்துக்கு ஒரு ப்ளஸ்.ஹீரோ போன்ற உடல்வாகுடன் பயமூட்டும் பின்னணி இசையில் வரும் வில்லன் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் கலக்கல்.காஜல் அறிமுக காட்சியில் சேலையில் வருகிறார்..கொள்ளை.!!!ஆனால் அதற்க்கு பின்னர் வரும் காட்சிகளில் எல்லாம் ஏனோ பெரிதாக பிடிக்கவில்லை.காஜலுக்கான ஆடை செலேக்சன் சுத்த வேஸ்ட்டு.கொஞ்சம் வயதான மாதிரி தெரிகிறார்.படத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை காட்சிகள் சற்று அதிகம்.ஒன்று இரண்டு வசனங்களில் கூட..!
“ஸ்லிப்பர் செல்ஸ்” எனப்படும்,நாட்டில் சாதாரண குடிமகனாய் இருந்து உயர்மட்ட கட்டளை கிடைத்தவுடன் அதனை செயல்படுத்த உயிரை கூட கொடுக்க தயாராக இருப்பவர்கள் தான் படத்தில் முக்கிய இடம்பெறுகிறார்கள்.மும்பை குண்டுத்தாக்குதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான்.விஜய் உட்பட பன்னிரண்டு பேர் வில்லனின் குழுவினரை பின்தொடர்ந்து தாக்கும் காட்சி க்ளாஸ்.அதை போன்றது தான் தன் தங்கையை பணயம் வைத்து தனது நாயின் உதவியுடன் தீவிரவாதிகளின் இடத்தை கண்டுபிடித்து ரணகளம் பண்ணும் காட்சி கூட!

படம் முடிந்து வெளியில் வந்தால் பலருக்கு படம் சூப்பரா சொதப்பலா என்று
சொல்லத்தெரியாத நிலையிலேயே வீடு சென்றதை காண முடிந்தது.சிம்புவின் ”போடா
போடி” துப்பாக்கிக்கு சமனான போட்டியை தராது என்கின்ற காரணத்தாலும்,
வேறு பெரிய படங்கள் இப்போது வராது என்ற அனுகூலத்தாலும் துப்பாக்கி
ஓடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. துப்பாக்கி “ஹிட்”தான். ஆனால் அடுத்த கில்லி
என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்..எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்ததாலோ
என்னமோ எனக்கு தோன்றியதை எழுதினேன்.எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றோர்
பலருக்கு படம் நன்றாக பிடித்திருக்கிறது.பார்க்கலாம் என்ன ரிசல்ட்
வரப்போகிறது என்பதை.
எனது மார்க் 63/100
ஒருதடவை பார்க்கலாம் கட்டாயமாக.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !