ஆஸி.யில் இருந்து 26 இலங்கையர்கள் இரவோடு இரவாக நாடு கடத்தல்!
தஞ்சம் கோரிய இலங்கை அகதிகள் 26 பேர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இருந்து நேற்று (01) வியாழக்கிழமை இரவு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
விசேட விமானத்தின் மூலம் இவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இவர்கள் கள்ளப்படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய உரிய விசா, சட்ட நடைமுறைகளை கையாளவில்லை என்பதை காரணம் காட்டி அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் இவர்களை நாடு கடத்தியுள்ளனர.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து 116 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !