பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான தில்லு முல்லு படம் ரீமேக் ஆகிறது. வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் ரஜினி வேடத்தில் சிவா நடிக்கிறார். நாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கோவை சரளா, டாக்டர் சீனிவாசன், சத்யன், இளவரசு, மனோபாலா, பிரமானந்தம் ஆகியோரும் நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம் எழுதி பத்ரி இயக்குகிறார். இவர் வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு படங்களை டைரக்டு செய்தவர்.
இப்படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இவர்கள் இணைந்திருப்பது பட உலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சூப்பர் ஹிட் பாடல்களுடன் வந்த ஏ.வி.எம்.மின் மெல்ல திறந்தது கதவு படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.
லஷ்மண் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் வெண்ணிலா கபடி குழு படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். பாடல்கள் கண்ணதாசன், வாலி, எடிட்டிங்: பிரவீன்ஸ்ரீகாந்த், ஸ்டண்ட்: ராக்கி ராஜேஷ், நடனம்: கல்யாண், தினேஷ், ஷோபி, அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !