Home »
சினிமா செய்திகள்
» ஹீரோவாகும் பிரபு…..
ஹீரோவாகும் பிரபு…..
Written By Anonymous on Monday, September 17, 2012 | 9:31:00 PM
சினிமா உலகத்தில் பிரபுவுக்கு, “சின்னத்தம்பி என்ற செல்லப்பெயர் உள்ளது. அவர் நடித்து சூப்பர் ஹிட்டான, “சின்னத்தம்பியை ஞாபகப்படுத்தும் விதமாகவும், நடிகர் திலகத்தின் கலைவாரிசு என்பதாலும், அந்தப் பெயர், அவருக்கு அடைமொழியாக வந்து சேர்ந்தது. அந்த, “சின்னத்தம்பி இப்போது, “செல்லத்தம்பியாக மாறுகிறார். மகன் விக்ரம் பிரபுவுக்கு ஹீரோவாக முடி சூடிய பிறகு, குணசித்திர வேடங்களை மட்டுமே ஏற்று நடித்தார் பிரபு. அவரை மீண்டும் ஹீரோவாக்கி அழகு பார்க்கின்றனர். “செல்லத்தம்பியில் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அப்பா – மகன் என, இரு மாறுபட்ட வேடங்களில் தோன்றுகிறார். சுவாசிகா, ஆசிப் அலி ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை, நிஷாந்த் இயக்குகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்குகின்றனர்.
Labels:
சினிமா செய்திகள்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !