.jpg)
படையினரின் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் சீரற்ற பாதைகளில் பயணிக்கக்கூடிய நாய் வடிவிலான ரோபோவை அமெரிக்க இராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த ரோபோ இயந்திரத்தில் ஒரு தடவை எரிபொருள் நிரப்பினால், 400 இறாத்தல் எடையுள்ள பொருட்களை சுமந்துக்கொண்டு 20 மைல் தூரம் பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மெரைன் படையினரால் இது பரிசீலிக்கப்பட்டபோது அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மேற்படி இயந்திரங்களுக்கு உரையாடும் ஆற்றலை அளிப்பதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்திட்டத்துடன் தொடர்புடைய லெப்.கேணல் ஜோ ஹிட் இது குறித்து தெரிவிக்கையில், அந்த இயந்திரத்தை
இயக்குவதற்கான வானொலி இயக்குநர் ஒருவர் தேவைப்படுகிறார். 'அமர்ந்திரு', 'நில்' போன்ற உத்தரவுகளை ரோபோ இயந்திரத்திற்கு கூறுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், 'நான் சிக்கியுள்ளேன்',
'காத்திருக்கவும்' என்பன போன்ற தகவல்களை வானொலி இயக்குநகருக்கு ரோபா தெரிவிக்கலாம்' என அவர் கூறினார்.
இவ்வியந்திரம் தொடர்பான வீடியோக்காட்சியை யூடியூபில் சுமார் 360,000 பேர் பார்வையிட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !