![]() |
கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு கற்கைகள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற போதே இம்மூவருக்கும் LLM பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் சட்டத்துறையில் சுமார் எண்பது பேர் சட்ட முதுமாணிப் பட்டத்தையும் மருத்துவத் துறையில் சுமார் நூறு பேர் வைத்திய முதுமாணிப் பட்டத்தையும் வேறு சிலர் தத்தம் துறைசார் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான நிஸாம் காரியப்பர், மு.கா. சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகிய மூவரும் கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு கற்கை நிறுவனத்தில் சட்ட முதுமாணி பாட நெறியைப் பூர்த்தி செய்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட முதுமாணி பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். இதன் பேரிலேயே இவர்கள் LLM பட்டம் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 1999 ஆம் ஆண்டு சட்டத்துறையில் LLM பட்டத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !