
இதனால் நாளை சனிக்கிழமை அதிகாலை முதல் நோன்பு நோற்குமாறு இலங்கையில் வாழும் முஸ்லிம்களை கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டியுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலிலுள்ள மத்ரஸதுல் ஹமீதியா மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையினை அடுத்து இடம்பெற்ற பிறை தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, நாட்டின் பல பிரதேசங்களில் பிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தலுடன் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் அகில இலஙகை ஜம்இயதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பிரதிநிதிகள், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் தக்கீயாக்கல் மற்றும் சாவியாக்கல் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !