![]() |
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 இரகசிய அறைகளில் பல இலட்சம் கோடி ரூபா மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது 2 அறைகளில் உள்ள பொக்கிஷங்களைக் கணக்கெடுக்கும் பணி உச்சநீதிமன்றம் நியமித்த மதிப்பீட்டு குழுவால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பத்மநாபசுவாமி கோவிலின் அடியில் பல சுரங்கங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் போர்க்காலங்களில் மன்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தப்பிச் செல்வதற்காகவும், ஆபத்துக் காலங்களில் பொக்கிஷங்களைப் பாதுகாப்பாக வேறு இடத்துக்குகொண்டு செல்லவும் இந்த சுரங்கப் பாதைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரகசிய அறையி்ல் பல இலட்சம் ரூபா மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதால் பத்மநாபசாமி கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு அடியில் சுரங்கப்பாதை இருந்தால் அந்த வழியாக கொள்ளையர்கள் நுழையலாம் என பொலிஸ் கருதுகிறது. இதனால் சுரங்கப்பாதை உள்ளதா எனக் கண்டுபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து கேரள நிலவியல் துறை பொறியாளர்கள் சுரங்கப்பாதை இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வைத் தொடங்கியுள்ளனர். _
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !