
லண்டனில் புனித போல் தேவாலயத்தில் நடந்த நன்றி கூறுவதற்கான திருப்பலி பூசையுடன் ஆரம்பமான நிகழ்வுகளில், அரச குடும்பத்தவர்களும், பிரித்தானிய மற்றும் வெளிநாடுகளின் அரசியல் தலைவர்களும், இராணுவ தலைவர்களும் ஏனைய பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக இராணியார் பக்கிங்ஹாம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக தேவாலயத்தை வந்தடைந்தார். பூசையின் போது கண்டர்பரி பேராயர் றொவான் வில்லியம்ஸ் மகாராணியின் சேவைகளை பாராட்டி உரையாற்றினார்.
பூசையை அடுத்து, லண்டன் மேயரின் அதிகார பூர்வ இல்லமான மன்சன் ஹவுஸில் வரவேற்பு உபசாரம் நடந்தது. அதனையடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மதிய விருந்து நடைபெற்றது.
பின்னர் லண்டன் நகரின் ஊடாக அரச குடும்பத்தினர் வாகனங்களில் பவனியாக வந்தார்கள். வீதிகளின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று மகாராணியாரை வாழ்த்தினார்கள்.
மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் சுகவீனம் காரணமாக இன்றைய இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !