
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளைச் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது, மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் விடுத்த, முறைகேடான நியமனங்கள் இடம்பெறக்கூடாது, மூப்பு அடிப்படையில் நியமனம் வழங்கப்பட வேண்டும் வலது குறைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், போன்ற கோரிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைவாக திறைசேரிக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கமைவாக இந்த நியமனங்கள் வழங்கப்படகின்றன. பட்டதாரிகளாகிய உங்களது நீண்டகால முயற்சிக்குப் பயன் கிடைத்திருக்கிறது. உங்களது சங்கம் பலமானது, இது தொடர்ச்சியாக இயங்க வேண்டும்.
பட்டதாரிகள் யாரும் எந்தஒரு அரசியல்வாதிக்கும், முகவருக்கும் சிறு தொகையைக் கூட வழங்கி பிரச்சினைகளை ஏற்படுத்திவிட வேண்டாம். அவ்வாறானவர்கள் தொடர்பான விபரங்களை எனக்கு அறியத்தரவும். பரீட்சைகள் மூலம் பட்டதாரிகளை அரசாங்க நியமனங்களில் உள்வாங்கும் முறைமை நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் நேர்முகப்பரீட்சைகளின் மூலம் அரச நியமனங்களில் உள்வாங்கப்படவீர்கள் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேர்முகப்பரீட்சைகளில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள். அத்துடன் நேர்முகப்பரீட்சை முடிவுற்றதும் அது தொடர்பிலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்தும் ஏற்படும் பண வீக்கத்துக்கு ஏற்றால் போல் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோட்டாவே இது வாகும். இதற்காக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. இந்த நேர்முகப்பரீட்சையில் அனைத்துப்பட்டதாரிகளும் பங்கு கொள்ளுங்கள்.
உங்களுடைய நியமனங்களை வழங்குவதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்று அதனைச் செயற்படுத்துகிறது. அதன் மூலமும் பணவீக்கம் அதிகரிக்கப் போகிறது. பொருளாதாரத்தினை வளப்படுத்துவதற்காக பெரும் சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கையில் முதலிடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வெண்டிய நிலை உருவாகியுள்ளது எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !