

மேற்படி குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற உதவி பொலிஸ் அத்தியட்கர் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு இன்று கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்விடயம் தொடர்பாக, சட்டமா அதிபரின் ஆலோசனையை தாம் கோரியிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இராணுவத்தினர் வசமிருந்த 2000 தொன் வெற்று ஆட்லறி ஷெல்களை விடுவிப்பதற்காக மேற்படி சந்தேக நபர்கள் போலி ஆவணங்களை தயாரித்தாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக பாதுகாப்பு அமைச்சின் கடிதத் தலைப்பில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினதும் அவரின் மனைவியினதும் பெயரை மோசடியாக பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !