![]() |
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கோர்காத்ரி பகுதியில் கோரக்நாத் கோவில் உள்ளது.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்த கோவில் மூடப்பட்டு கிடந்தது.
இந்த கோவிலின் முன்னாள் பூசாரியின் மகள், கோவிலை திறக்க கூறி பெஷாவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்குதல் செய்திருந்தார்.
இவரது மனுவை ஏற்ற நீதிமன்றம், கோவிலை வழிபாட்டுக்கு திறந்து வைக்கும் படி உத்தரவிட்டது. தற்போது, இந்த கோவில் பாகிஸ்தான் தொல்பொருள் ஆய்வு துறை வசம் உள்ளது.நீதிமன்ற உத்தரவுக்கு பின், இந்த கோவில் மூன்று முறை சில விஷமிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த கோவிலில் கடந்த வாரம் நுழைந்த 8 பேர், அங்குள்ள படங்களை எரித்து விட்டு சில சிலைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக, கோவிலின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை தாக்குதலுக்குள்ளாகியுள்ள, 160 ஆண்டு பழமைவாய்ந்த இந்த கோவிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாகிஸ்தானில் உள்ள இந்து தலைவர்கள் கோரியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !