தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை நடை பெற இருந்தவேளை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுவரொட்டிகள் மட்டக்களப்பு நகரிலும் ஏனய பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டு காணப்படுகின்றன. தமிழரசுக் கட்சி அதிருப்தியாளர்கள் என்ற பெயரில் இவ் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் பல இடங்களில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளது

இம்மாநாடு நடைபெறவிருந்த தேவநாயகம் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டமையினால் இம்மாநாடு அமெரிக்க மிசன் மடண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் எந்த விதமான மாற்றமும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தின் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !