
உலக செஞ்சிலுவை தினத்தினை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இன்று செவ்வாய்க்கிழமை மட்டு. மாகாஜன கல்லூரி கேட்போர் கூடத்தில் இரத்த தான முகாமொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது மாவட்டத்தினை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர். இலங்கைச் செஞ்சிலுவை அமைப்பிப்பின் மட்டக்களப்பு கிளை தலைவர் த.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டு. போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் முருகானந்தம் மத தலைவர்கள் இராணுவத்தினர் பொலிஸார் கடற் டையினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மனித நேயத்திற்றாக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் உலகிலுள்ள 186 நாடுகளில் உலக செஞ்சிலுவை தினம் அனுஸ்டிக்கப்பபடுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !