.jpg)
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, இனந்தெரியாத நபர்கள் சிலர், ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச்சென்று மறைந்தனர்.
குறைந்தபட்சம் 5 மர்ம நபர்கள், தங்களது காற்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை எடுத்துக்கொண்டு மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காட்டியவாறு ஓடிச் சென்றனர்.
இவர்கள் எதற்காக இவ்வாறு செய்தனர் என்பதும் அவர்களது நோக்கம் என்ன என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !