
'ஓர் உலக ஊடக விருது' விழாவில் (ஒன் வேர்ல்ட் மீடியா அவார்ட்) ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சிறந்த ஆவணப்படம் ஆகிய விருதுகள் செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவலகம் வலியுறுத்தக் காரணமாக இருந்ததை கருத்திற்கொண்டே இவ்விரு விருதுகளும் செனல் 4ற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆவணப்படத்தை தொகுத்து வழங்கிய ஜோன் ஸ்னோ, 'தான் இதுவரையில் வெளிக்கொணர்ந்த செய்திகளில் மிகவும் முக்கியமானது இலங்கையின் கொலைக் களம்தான்' என்று கூறியுள்ளார்.
இதேவேளை, சோமாலியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜமால் ஒஸ்மான், ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருதினைப் பெற்றுள்ளார்.
சோமாலிய ஓட்ட வீரரின் போராட்டம், சோமாலிய வரட்சி மற்றும் பஞ்சம் ஆகியவற்றை சிறப்பாக சித்தரித்தமை உட்பட இவரது செய்திகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது விழாவில், பீ.பீ.சீ. சர்வதேச சேவைக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஹெய்ட்டி கொலரா நோய்ப் பரவல் பற்றிய செய்தி தொகுப்பில் ஈடுபட்டதற்காக பீ.பீ.சீ.யின் உலக வானொலி சேவைக்கு சிறந்த வானொலிக்கான விருது கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் வழங்கப்பட்ட விருதுகள் தொடர்பான முழு விபரங்கள் வருமாறு,
சிறந்த ஊடகவியலாளர் :- ஜமால் ஒஸ்மான் (செனல் 4)
சிறந்த ரேடியோ :- பீ.பீ.சீ உலகச் சேவை (ஹெய்டி கொலரா தொற்றுநோய் விவகாரம்)
சிறந்த தொலைக்காட்சி :- செனல் 4 (இலங்கையின் கொலைக் களம்)
சிறந்த பத்திரிகை :- ஒப்சர்வர் சஞ்சிகை (தி ரேப் ஒப் மென்)
சிறந்த புதிய ஊடகம் :- எஸ்.ஓ.எஸ் ஷில்ட்ரன் (எங்கள் ஆபிரிக்கா 'அவர் அஃப்ரிகா')
சிறந்த நாடகம் :- ஷிங்கா ப்ரொடக்ஷன்ஸ் (ஒதெல்லொ பர்னிங்)
சிறந்த கட்டுரை :- பீ.பீ.சீ டூ (தோக்ஸ் பிளேஸ் டு பீ அ பின்மேன்)
சிறந்த அபிவிருத்தி :- ஒன் தி லெவல் ப்ரொடக்ஷன்ஸ் (தெயார் வன்ஸ் வோஸ் அன் ஐலண்ட்)
சிறந்த செய்தி :- தி கார்டியன் மற்றும் ஐரிவி நியூஸ்
சிறந்த ஆவணப்படம் :- செனல் 4 (இலங்கையின் கொலைக் களம்)
சிறந்த மாணவர் :- ஸேனா மர்டன் (லண்டன் தொலைத்தொடர்புக் கல்லூரி)
சிறப்பு விருது :- ஜெம் டிவி
மாணவர் உரிமை விருது :- அல் ஜஸீரா (ஸ்பெல் ஒப் தி அல்பினோ)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !