
இக்கப்பல் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து நியூயோர்க்கிற்கு புறப்படும் என கிளைவ் பால்மர் எனும் மேற்படி கோடிஸ்வரர் இன்று அறிவித்துள்ளார்.
டைட்டானிக் கப்பல் விபத்தினால் 1500 பேருக்கும் அதிகமானோர் பலியாகினர். இச்சம்பவத்தின் நூற்றாண்டு நினைவுதினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் கிளைவ் பால்மர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனமான சி.எஸ்.சி. ஜிங்லிங்குடன் டைட்டானிக் - 2 எனும் கப்பலை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
அசல் டைட்டானிக் கப்பலில் இருந்த ஆடம்பர வசதிகளை இக்கப்பல் கொண்டிருக்கும். ஆனால் அது 21 ஆம் நூற்றாண்டின் அதிநவீன தொழில்நுட்பங்களை நவீன கடல்பயண மாற்றும் பாதுகாப்பு முறைமைகளையும் கொண்டிருக்கும் என பால்மர் தெரிவித்துள்ளார். (படம் ஏ.எவ்.பி.)

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !