
பிரிக்கப்படாத ஒன்றிணைந்த ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நேர்மையான அதிகாரம் மிக்க அரசியல் தீர்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த தமிழ்த் தேசியக் கூட்மைப்பு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது.
தந்தை செல்வாவின் நினைவு நாளையொட்டி தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இன்று பிற்பகல் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றிய கூட்மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய இரா.சம்பந்தன்,
சிறுபான்மை இன தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பாகவும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அரசு நடவடிக்கை எடுத்தது.
இனைத்தொடர்ந்து சந்திரிக்கா பண்டார நாயக்க அரசில் 1995, 1997, 2000ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் சிறுபான்மை இன அரசியல் தீர்வு மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம்தொடர்பாகவும்பேசப்பட்டது.
பின்னதாக மஹிந்த ராஜபக்ஷ் அரசு சர்வகட்சி குழு அமைக்கப்பட்டு அதனூடாகவும் தீர்வுகான நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக பேசப்பட்டது.
இவை அனைத்தும் இதுவரையிலும் செயற்பாட்டிற்கு வரவில்லை. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளும் அதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் காரணம் என அரசு குற்றஞ்சுமத்துகிறது. ஆனால் இந்நிலமை ஏற்பட அரசு தான் காரணம். இந்தியாவிற்கும் சர்வதேசத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகளை அரசு நடைமுறைப்படுத்த தவறியமையே சர்வதேசத்தின் தலையீட்டிற்கு வழிவகுத்தது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கூட்டமைப்பு அரசுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. எனினும் அதனை அரசே இடையில் முறித்துக் கொண்டது.
இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இனியும் காலம் தாழ்த்தப்படக் கூடாது. பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நேர்மையான அதிகாரம் மிக்க அரசியல் தீர்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயார் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன், சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் புளோட் அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !