கரையோரப்பகுதிகளுக்கான மின்விநியோகம் துண்டிப்பு; ரயில், பஸ் சேவைகள் இடைநிறுத்தம்
.jpg)
இதேவேளை, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கரையோரப்பகுதிகளுக்கான தனியார் பஸ் சேவைகளும் 3 மணித்தியாலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
கரையோர வைத்தியசாலை மருத்துவ உத்தியோகஸ்தர்களின் விடுமுறை ரத்து

அவசரநிலைமைகளுக்கு முகம்கொடுக்க தயாராக இருப்பதற்காக மருத்துவ ஊழியர்களை கடமைக்கு சமுகமளிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
இதேவேளை உல்லாச பிரயாணிகளின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கரையோர பிரதேசங்களிலுள்ள குறிப்பாகஇ தெற்கு, கிழக்கு, மேல் மாகாணங்களிலுள்ள உல்லாச ஹோட்டல்களை இலங்கை சுற்றுலா திணைக்களம் கோரியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் பயணிப்பதற்கு இலவச அனுமதி
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்றையதினம் வாகனங்கள் இலவசமாக பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !