
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சார்பில் அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில்,
உலகம் முழுவதிலும் வாழும் இலங்கையர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு பண்டிகை உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்துள்ளது.
நாட்டில் வாழும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சுபீட்சமானதும் ஜனநாயாகமானதுமான இலங்கையை கட்டியெழுப்ப முயற்சி எடுக்க வேண்டும்.
கடந்த 150 ஆண்டுகளாக இலங்கையுடன் பேணி வந்த உறவுகளைப் போன்றே தொடர்ந்தும் சிறந்த உறவுகளைப் பேண அமெரிக்கா விரும்புகிறது.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவளிக்கும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதும் நெகிழ்வுத் தன்மையுடன் கூடியதுமான இலங்கையை உருவாக்க உள்நாட்டு வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என ஹிலாரி கிளின்ரன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !