.jpg)
(ரி.லோஹித்)
'அனர்த்தங்களுக்குப்பின் கிழக்கிலங்கை' எனும் தலைப்பிலான கருத்தரங்கொன்று நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு கத்தோலிக்க வாலிபர் ஒன்றிய மண்டபத்தில நடைபெற்றது.
கல்முனை உளநல சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையேற்று நடத்தினார்.
இக் கருத்தரங்கில், 'மட்டக்களப்பு மாவட்ட உட்கட்டுமான அபிவிருத்தி' எனும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகமும், 'கிழக்கிலங்கையின் சுகாதாரத்துறை - அபிவிருத்திப் பணிகள்' எனும் தலைப்பில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராயனும், 'கிழக்கிலங்கையில் உள நலம்' எனும் தலைப்பில் மட்டக்களப்பு போதனா வதை;தியசாலை உளநல மருத்துவர் வைத்தியக் கலாநிதி ரி.கடம்பநாதனும் உரை நிகழ்த்தினார்.
இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வண பிதா நவரெட்ணம்(நவாஜி) 'இன்றைய இளைஞர்கள'; என்ற தலைப்பிலும், பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவியும், எழுத்தாளருமான திருமதி றூத் சந்திரிக்கா சுரேஸ் 'பெண்களும் குடும்பங்களும்' எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
இங்கு உரையாற்றிய, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன்,
மக்களின் சனத்தொகை வளர்ச்சியை சமப்படுத்தும் அளவுக்கும் அதிகமாக சுகாதார வசதிகள் இரண்டு மடங்கால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கிலங்கையின் சுகாதாரத்துறையாக இருந்தாலும், தேசிய ரீதியானதாக இருந்தாலும்; இரண்டுமே சமாந்தரமாகச் Nசைவகளைச் செய்து வருகின்றன. போசணையில் மாத்திரமே சிறிதளவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
மனித நேயமுள்ள நல்ல உத்தியோகத்தர்களும் ஊழியர்களுமே இப்போதைய தேவையாக இருக்கிறது. அதன் மூலமே சிறப்பான வளர்ச்சிகளை நாம் எட்டிக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !