

"இந்தியாவின் தென் பகுதியில் உள்ள அணு மின் நிலையங்களால் இலங்கைக்கு கதிர் வீச்சு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து சர்வதேச அணுசக்தி கழகத்திடம் புகார் அளிப்போம்´ என, எரிசக்தி துறை அமைச்சர் சம்பிகா ரணவாக்கா சமீபத்தில் புகார் தெரிவித்து இருந்தார். இந்திய அணுசக்தி திட்ட தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி, இதை மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து இலங்கை தெரிவித்துள்ள புகார் தவறானது. உலகில் உள்ள அணுமின் நிலையங்களிலேயே, மிகவும் பாதுகாப்பானது கூடங்குளம் அணுமின் நிலையம் தான். இங்கு பாதுகாப்புக்கு எந்த பிரச்னையும் இல்லை. முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளன.
விபத்து போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் எல்லை தாண்டிய பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்ற விஷயத்தில் சர்வதேச அணுசக்தி கழகத்துடன் ஏற்கனவே இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அணுசக்தி கொள்கை தொடர்பான சட்டத்திலும் இதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.
கதிர்வீச்சை அளவிடும் பணிகள் ஆரம்பம்
மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான கரையோரப் பகுதிகளில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
“தென்னிந்தியாவில் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையத்தால், ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் இந்தப் பகுதியே அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
மன்னார் நகரில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள கூடங்குளத்தில் இந்த அணுமின் நிலையம் அமைந்துள்ளது.
கதிர்வீச்சின் அடிப்படை அளவை கண்டறிவதும், அதனை அடிப்படையாக வைத்து உள்ளூர் அதிகாரிகள் மூலம் தொடர்ச்சியாக கதிர்வீச்சு அளவை கண்காணிப்பதற்குமே இந்த அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இதன்மூலம், கதிர்வீச்சின் அளவில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் இலகுவாக அடையாளம் காண முடியும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !