
நேற்று வியாழக்கிழமை இரவுக்கு பின்னர் இந்த சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பின் கடந்த காலங்களில் அகிம்சை போராட்டங்களின் முக்கிய இடமாக திகழ்ந்துவந்ததுடன் மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டத்தை கௌரவிக்கும் வகையிலும் இந்த சிலை நிறுவப்பட்டிருந்தது.
அத்துடன் பேடன் பவலின் நூற்றாண்டு விழாவின் நிகழ்வுகள் தம்புள்ளையில் இடம்பெற்று வருகையில் அதுவும் உடைக்கப்பட்டுள்ளது.
இரு சிலைகளினதும் தலைப்பகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்துக்கு வருகைதந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தினை தொடர்ந்து பதற்ற நிலையை தணிப்பதற்காக குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நகர அமைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட்டோர் சம்பவம் தொடர்பில் பார்வையிட்டதுடன் சிலை உடைப்புக்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !