![]() |
தொழில்நுட்ப உலகத்தில் பெரிதும் அறியப்படாத கலப்பு உலோகம் 'liquid metal' ஆகும்.
இது தொடும் போது கண்ணாடி போன்ற உணர்வைத் தரக்கூடியது.
இது டைட்டானியம், நிக்கல், கொப்பர், சிக்ரோனியம் உட்பட சில உலோகங்களால் உருவாக்கப்பட்டது.
இக் கலப்பு உலோகமானது உறுதியானது, பாரம்குறைந்தது மற்றும் கீறல்கள் விழாத தன்மைகொண்டது.
இச் செய்தியானது உத்தியோகபூர்வமானதல்ல என்ற போதிலும் எதிலும் புதுமைகளைப் புகுத்திவரும் அப்பிள் இக் கலப்பு உலோகத்தினை உபயோகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இவ் உலோகத்திற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் அப்பிளின் ஐ போன் 5 வெளியாவதற்கு தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்பிளின் ஐ போன் 5 ஜூன் அல்லது ஒக்டோபர் மாதமளவில் வெளியாகலாம் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !