Home »
» அனைத்து மதுபான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு, சிகரெட் விலையும் உயர்ந்தது
அனைத்து மதுபான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு, சிகரெட் விலையும் உயர்ந்தது
இன்று (31) தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் பியர், உள்நாட்டு உற்பத்தி பியர் மற்றும் கடின மதுபானம் ஆகியவற்றிற்கான வரியை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக நிதித் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் பியருக்கான தீர்வை 50 ரூபாவாலும் தேசிய உற்பத்தி பியருக்கான வரியை 05 ரூபாவாலும் கடின மதுபானங்களுக்கான இறக்குமதி தீர்வை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வர்க்க சிகரெட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ரூபாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகரெட் வகைகளுக்கான வரி அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சிகரெட் வகைகளில் விலையை உயர்த்த நேரிட்டதாக இலங்கை புகையிலை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !