![]() |
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி டுவிட்டர் வெளியிடப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுக்கிடையே அதிகமான கருத்துப் பரிமாறல்கள் இல்லை என்ற உண்மையை இப்போது பொய்பித்துவிட்டது டுவிட்டர் வலைத்தளம்.
சமுக வலைத்தளமான டுவிட்டர் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாற உதவுவதுடன் மனதில் தோன்றியவற்றை உடனே தெரிவிப்பது போன்ற விஷயங்களை நொடிப்பொழுதில் நிறைவேற்றி வருகிறது .
இத்தகைய வசதியைக் கொண்ட சமுக வலைத்தளமான டுவிட்டரை உருவாக்கிய பெருமை ஜேக் டார்சி என்பவரையே சாரும் .
மென்பொருள் வல்லுநரான இவர் உருவாக்கிய டுவிட்டரில் இன்று 28 மொழிகளில் பயன்படுத்த முடியும்.
முதலில் 5 பேர் கொண்ட குழு மூலம் உருவாக்கப்பட்ட இந்த டுவிட்டர் இன்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது .
சாதாரண மனிதர்களில் இருந்து பெரிய பிரபலங்கள் வரை டுவிட்டரை இன்று பயன்படுத்துகின்றமை குறிப்பிடதக்கது .
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !